அம்பிகை

அன்னையின் அழகைக் காண
ஆயிரம் கண்கள் வேண்டும்!
மின்னிடும் முகத்தைக் காண
மேலுமோர் நூறு வேண்டும்!
இன்னுமோர் நூறு வேண்டும்
இருகரம் அருள்தல் காண!
பின்னுமோர் நூறு வேண்டும்
பேச்சற்று நிற்கத் தானே ?

எழுதியவர் : கௌடில்யன் (20-Jan-18, 2:50 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 323

மேலே