கருவறை வாசம்
அந்த வாசனை
என்னவென்று சொல்ல
சந்தனம் ஜவ்வாது
அத்தர் மல்லிகை
மனங்கமழும்
வாசனை திரவியம்
என எதுவும்
அதற்கு ஈடில்லை
அந்த வாசனையை
நுகர்ந்தாலே
உறக்கத்துக்கு
தாலாட்டும்
பசிக்கு பாலும்
வலிக்கு மருந்தும்
தனிமைக்கு துணையும்
இழப்பிற்கு ஆறுதலும்
கிடைத்துவிடும் என்று
எந்த குழந்தையும் நம்பும்
ஒரே வாசம் தாயின் வாசம்
அந்த கருவறை வாசம்....