காதல் -அவள் அவன்மீது வைத்த காதல்
நான் உன்னவள் என்றும் உன்னவளே
உன்னுள் தொலைந்து போனேனோ
தெரியலையே, தொலைந்திட விரும்புகின்றேன்
உன்னுள் கலந்திட, தொலைந்திட
பகலிலே சூரியன் ஒளியிலே
தொலைந்திடும் நிலவைப்போல
அதிகாலையில் மார்கழியில் ஆதவன்
இளங்கதிர்கள் தாக்க மாற இலைகளில்
உருகி சொட்டும் பனித் துளிகள் போல
நீ என் மீது பெரும் காதல் கொண்டாய்
அந்த காதலில் ஓர் அழகும் ஒளியும்
தனியே வீச கண்டேன் , அந்த ஒளியில்
அந்த எழிலில் கலந்திடுவேனே ஏனெனில்
நான் உன்னவள், என்றும் உன்னவளே
அதனால் உன்னுள் தொலைந்திட விரும்புகின்றேன்
என்னை நீ நம் காதல் கடலின் ஆழத்தில்
விட்டுவிடு , என் நினைவுகள் அங்கு மிதக்கட்டுமே
என்னைக் குருடாய், செவிடாய் விட்டுவிடு
உந்தன் காதலெனும் புயலால் அடித்து
செலவதை உணர்வேன் அந்த ஸ்பரிசத்தில்
சலனத்தில் உன்னுள் மூழ்கி தொலைந்த
பேரின்பத்தில் அப்போது நான் இருப்பேன்
நான் உன்னவள், உன்னவளே எப்போதும்
உன்னுள் தொலைந்து கலந்து நிற்பேன்