மனிதம் போனது

ஆணுக்கு நிகரென பெண் நினைத்தபோது பெண்மை போனது!
பெண்ணுக்கு நிகர் அழகென நினைத்தபோது வீரம்(ஆண்மை) போனது!
அறிவியலின் அடுத்த அறிவால்
மனிதன் அறிவு போனது!
ஆடைகளில் அழகு என நினைத்தபோது அன்பு போனது!
இயந்திரங்கள் சிந்திக்க நினைத்தபோது மனிதன் சிந்தனை போனது!
உருவத்தில் உளவு கண்ட போது
மனித உணர்வு போனது!
கற்க படிக்காமல் தன்னை விற்க படித்தபோது பாசம் போனது!
மனிதனின் பகுத்தறிவு பணம் சேர்க்க (சுயநலம்) நினைத்தபோது மனிதம் போனது!
இங்கே மனிதம் போனது

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 9:53 pm)
Tanglish : manitham ponathu
பார்வை : 1312

மேலே