நிஜமும் நிழலும்
அழகில் சிறப்பது வாழ்க்கை அல்ல
அறத்தில் சிறப்பது வாழ்க்கை
அழகு பத்து ஆண்டுகள் தான்!
அறம் உன் சந்ததிக்கும் தான்...
காதலில் கலையாமல் இருப்பது வாழ்க்கை அல்ல
காலத்தில் அழியாமல் இருப்பது தான் வாழ்க்கை
காதல் கல்யாணம் வரை!
காலம் உயிர் இருக்கும் வரை...
அதிகாரத்தில் வாழ்வது வாழ்க்கை அல்ல
அன்பில் வாழ்வது வாழ்க்கை
அதிகாரம் நிழலை தான் காக்கும்!
அன்பு மட்டுமே நிஜத்தை காக்கும்...