வாழ்க்கை இழப்பு

ஆரம்பத்தில் துலைத்தேன் அன்னையின் கருவறையை,
அடுத்ததில் துலைத்தேன் தந்தையின் அறிவுரையை!
பள்ளியில் துலைத்தேன் வகுப்பறையை,
பருவத்தில் துலைத்தேன் நித்திரையை!

கருவறை இருட்டு சுகம் என நினைத்தேன்!
கல்லறையில் அடங்கும் போது..

புரிந்தது வாழ்க்கை....
கற்பதில் பாதியை துலைத்தேன்,
பெற்றதில் மீதியை துலைத்தேன்!
வாழ நினைக்கும் போது?
என்னை துலைத்தேன்..

-வாழ்வோம் முடிந்த வரை...

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:07 pm)
Tanglish : vaazhkkai ezhappu
பார்வை : 228

மேலே