சினிமா

ஒரு வார்த்தை ஒரு கோடியில் பிரபலங்கள்,
சொல்லுவதெல்லாம் உண்மையில் பஞ்சத்து மக்கள்,
காரணம்...
அவர்கள் அழ நடிக்க தெரிந்தவர்கள்!
இவர்கள் வாழ்க்கையில் அழ தெரிந்தவர்கள்!

மெர்சல் படத்தில் ஓங்கிய கை பேச்சிற்கு வரவேற்பு உண்டு,
டெல்லியில் ஓங்கிய கையிற்கு ஒரு வருட சிறை தானே உண்டு,
காரணம்...
அவர்கள் நாட்டை ஆழ்பவர்கள்!
இவர்கள் நாட்டில் வாழ்பவர்கள்!

படத்தில் பிச்சைக்காரனுக்கு கூட காதலி உண்டு,
நிஜத்தில் என்ஜினீயருக்கு ஒரு வேளை மட்டுமே சோறு உண்டு,
காரணம்...
அவர்கள் விலைக்கு போனார்கள்!
இவர்கள் விலை குடுத்து போனார்கள்!

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:05 pm)
Tanglish : sinimaa
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே