நிஜம்

வீரம் அழிந்தது,
உன்னிடம் சொல்லாமல்,
ஊருக்கு சொன்னபோது...

விவேகம் அழிந்தது,
அறிவை சொல்லாமல்,
அறியாமையை சொன்னபோது...

கலாச்சாரம் அழிந்தது,
மனிதத்தை சொல்லாமல்,
மங்கையை சொன்னபோது...

காலம் அழிந்தது,
நிஜத்தை சொல்லாமல்,
நிழலை சொன்னபோது...

இறுதியில், அடையாளம் அழிந்தது,
உணர்வை சொல்லாமல்,
உருவத்தை சொன்னபோது...

அடித்தளம் இழந்த தூணும்,
அடையாளம் இழந்த நானும்
வளர்ந்தும் பயனில்லை.....

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:13 pm)
Tanglish : nijam
பார்வை : 337

மேலே