விண்மீன் இதயம்
விண்மீன் கூட சிறியது,
கொண்ட தொலைவால்....
இதயம் கூட சிறியது,
கொண்ட இடத்தால்....
இன்னும் பிழை விண்மீனிடம்!!!
விண்மீனின் உண்மை தெரியும்,
உன் கண்விழி அடங்கா நிலையில்....
இதயத்தின் உண்மை புரியும்,
உன் கண்விழி கலங்கும் நிலையில்....
அன்று உன் இறுதி நாள் தெரியும்,
நினைவில் மட்டும் அல்ல, நிஜத்திலும்.....