நிலை

சாமானியர் உலகில்,
தத்துவங்களின் நிலை -கிறுக்குத்தனம் !

பொருள் ஆதாயம் தேடும் உலகில்,
அருள் வேண்டுவோனின் நிலை -வாழ தெரியாதவன் !

சாதுர்ய நரிகள் நிறைந்த உலகில் ,
நேர்வழி மனிதனின் நிலை -பேதைமை!

விதிகள் தனக்கென்றால் விலக்கு-என்று
வாழ்வோரின் உலகில்,
நியாயத்தின் நிலை -நிராதரவு!

பொய்மை பிழைப்பின் அங்கமாய் ஆன உலகில்,
வாய்மையாளனின் நிலை -பிழைக்கத்தெரியாதவன் !

கடவுளும் கௌரவ சின்னமாய் ஆன உலகில்-
ஆன்மீகத்தின் நிலை-அனர்த்தம்!

மொத்தத்தில்,
பெரும்பான்மை மனிதரிடம்,
சிறுபான்மை நெறிகளின் நிலை-
வருந்த தக்கதோ?

எழுதியவர் : மகா !!! (22-Jan-18, 7:18 pm)
பார்வை : 104

மேலே