எல்லையில்லா உறவு
கற்றறிந்தோர் மட்டும் வாழ்வில் ஆசிரியர்கள் அல்ல...
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒன்றைக் கற்றுத்தரும் அனைவரும் ஆசிரியர்கள்தான்.....
**முதல் ஆசிரியர்கள்
பெற்றெடுத்த பெற்றோர்
**கற்கும் வேளையில்
கற்றறிந்தோரும், சான்றோர்களும்
**கடமை தருணத்தில்
நல்ல நட்பும், உறவுகளும்
**ஏமாற்றம் பெறும் நேரத்தில்
துரோகிகளும், சத்ருக்களும் கூட ஆசிரியர்கள் தான்
**வாழ்க்கை முடியும் தருணத்தில் உடனிருக்கும் துணைவியும் ஓர் ஆசிரியர் தான்
ஜென்மம் இறுதிவரை இடைவிடாமல் அன்பு, ஆசை, அறிவு, அறம்,இன்பம், சோகம், சுகம், பாசம், பரிதாபம், பரிமாற்றம், இலாபம், நட்டம், கல்வி, கொள்கை, குறிக்கோள், தொழில் துறவு, துன்பம், துணிவு, பணிவு, மரியாதை, மரபு, பாதை, அறிவுடைமை, அடங்காமை, அருளுடமை, பொன்,பொருள், அதிகாரம், ஆடம்பரம், வழி, விணை, மெய், பொய்,வாய்மை என எல்லாவற்றையும் கற்றுத்தரும் எவர் ஒருவரும் வாழ்க்கையில் நம் பேராசிரியர் தான்.....

