வெளிநாட்டு அடிமைகள்

வறண்ட நிலத்தின் விதைகளாய்
வாடும் பயிரின் இலைகளாய்

எண்ணம் மட்டும் பசுமையாய்
எழுத்துக்கள் அனைத்தும் வெறுமையாய்

கண்கள் மட்டும் குளிர்ச்சியாய்
காய்ந்த பாலையில் பார்வையாய்

உணர்ச்சிகள் அற்ற இயந்திரமாய்
உறக்கம் வேண்டும் பாவிகளாய்

அண்டி பிழைக்கும் அடிமைகளாய்
அயலார் நாட்டில் நாய்களாய்

ஏங்கி தவிக்கும் இதயங்களாய்
ஏற்றம் இன்னும் கனவுகளாய்

கூடி வாழும் சேவல்களாய்
குடும்பம் இருந்தும் அனாதைகளாய்

வாழ்க்கை இருந்தும் வாழாமல்
வண்டி இழக்கும் கழுதைகளாய்

இன்னும் எண்ண எண்ண விக்கி அடைகிறது தொண்டை

எழுதியவர் : மணிமாறன் மச்சக்காளை (23-Jan-18, 12:05 am)
பார்வை : 868

மேலே