முதுமொழிக் காஞ்சி 3
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை. 3
- சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்கசிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல்.
மேதை - அறிவு. கடைப்பிடித்தல் -மறவாதிருத்தல்.
கற்ற கல்வியை மறவாமையானது அறிவுநுட்பத்தைக் காட்டிலும் சிறந்தது.
அறிவு நுட்பம் மாத்திரம் அ அமைந்திருப்பது போதாது: கற்ற கல்வியை மறவாமையும் வேண்டும்.
நுட்பமாகப் பொருள்களை மேன்மேலும் நுனித்தறிய வல்லவனாயினும், ஒருவன் முன் குருமுகமாகக் கற்றதை மறவாமல் போற்றல் வேண்டும்.