சுதந்திர விடியல்

கருமேகம் போர் தொடுத்து
காட்டு வெள்ளம் நீர் இறைத்து
கட்டுண்ட கைகளெல்லாம்
அகிம்சையினால் விலங்கொடித்து
பாரதத்தின் பெருமைதனை
பாருக்கெல்லாம் உணர்த்தும்படி
காந்தி மகான் பெற்றுத் தந்த
பாரதத்தின் சுதந்திர விடியல் ....

எழுதியவர் : (23-Jan-18, 3:28 pm)
சேர்த்தது : Sundarivenkat
Tanglish : suthanthira vidiyal
பார்வை : 318

மேலே