பெண் குலம்

மல்லிகை பூத்த தோட்டமாய்
மலர்ந்து நிற்கும் கரு ஒன்று
பால்பிரிந்து பெண்ணாய்
பிறந்த பிறப்பொன்று

சிட்டுக்குருவி வட்டமிட்டு
அடைந்தது பெண்மை ஒரு நாளில்
வளர்ந்து வந்த வேகம்
சட்டென குறைந்துவிட
பெண்மை அனுகிய பறவை
சினுங்கி நின்றது வீட்டினிலே

கனவுகோலம் போட நின்று
கனவில் என்றும் மூழ்கிட
சுட்டெரிக்கும் வார்த்தைகள்
சூரியனைவிட கொதித்துவிட
கனவுகூடம் கண்ணீர்கலமானது

குலம் காக்க பெண் பிறந்து
மனிதநலம் வாழ தெய்வமாய் திகழ்ந்து
உறவால் சிக்குண்டு வருடும்
மாதர்குலம் கண்ட சொர்க்கம் என்னவோ?

எழுதியவர் : ப.இளவரசன் (23-Jan-18, 6:20 pm)
சேர்த்தது : vasanedy
பார்வை : 1041

மேலே