என்ன செய்வேன் நெஞ்சே
நானொன்று சொல்ல, இவனொன்று சொல்ல,
அவனொன்று சொல்ல,
என்னிலும் குழப்பம்,
இவனிலும் குழப்பம்,
அவனிலும் குழப்பம்...
குழப்பம் தீர விடை கேட்டு இயம்புகிறேன் நெஞ்சே!
கஸ்டம் கண்டு சிரிக்கும் காரணம் தெரியாத வழிகாட்டியின் தலைமையில் எங்கே போகிறாய்?
கானல்நீராய் நின்று காட்சி தரும் மாயை நோக்கியா?
வேண்டாம் நெஞ்சே!
மாயையில் மூழ்கினால் உன் உண்மையை நீ இழப்பாய்,
புத்தியுள்ள இம்மாந்தரைப் போல..
சக்தியில் உயர்த்தவனென்ற அகந்தை, யுக்தியில் உயர்ந்தவனாலும்,
யுக்தியில் உயர்ந்தவனென்ற அகந்தை, சக்தியில் உயர்ந்தவனும் அழியவே காரணம், காரியம் பல கொண்டு,
அனுபவமென்ற பல்லாக்கில் ஏறுவார், முறையான அறிவைப் பெறார்.
பெற்றவரெல்லாம் பெற்றவரா? என்றே ஆராய்ந்தால் பெற்றவரும் பெறாதவரே என்று உணர்த்தி நிற்கிறது காலத்தின் சாட்சி...
எல்லாம் அறிய கற்க, பாடமும், நடைமுறையும் என்றுமே கை கொடுப்பதில்லை பணத்தை நோக்கி ஓடும் வாழ்விலே...
நினைத்தால் முடியாதது ஏதுமில்லை...
நினைப்பவரிடம் செய்வதற்கு ஏற்ற சூழல் இல்லை...
உதவி கேட்டால் ஓராயிரம் ஏமாற்றம்...
கடைசியில் நினைத்ததே மறந்து போகும்...
என்ன செய்வேன் அருட்பெருஞ்சோதியே?