உலக போக்கு
உள்ளதை சொன்னேன்
பித்தனானேன்
சத்தியம் மடிந்து
மனிதன் வாழ்கிறான்
தர்மம் மீறி வினையில்
விழுந்து சாதிக்க விரும்புவது என்னவோ
மன்னிக்க மனம் தொலைந்துவிட்டது
தயக்கமின்றி பாவத்தில் பரிதாபப்படுகிறான்
கனவுபோல் கலையட்டும் என நினைத்தான் போல
கர்ம பாதாலத்திற்கு பாதை போடுகிறான்
கோயில்கட்டி கும்பிடப்பட்ட பெண்குலம் அன்று
ஆண்பசிக்கு இரையாகிறது இன்று
சாதனை படைக்க பிறக்கும் கன்னி
வழியின்றி சோதனைக்கு பலியாகிறது
ஓதும் திருமுறை கரைந்தது காற்றில்
அறம் ஓத ஒருநாதியும் இங்கில்லை
கனமே கழியும் கலியுகம்
கானமாய் கேட்பது எங்கணமோ?