குடியரசு

நம் பாரத நாடு
'பாருக்குள்ளே நல்ல நாடு'
என்று பாரதியால்
புகழ் பாட்டு பெற்ற நாடு
ஒரு எழில் பொங்கும்
'உப-கண்டமிது பரப்பில்'.
வடக்கில் இமயம் இதற்கு'
பாதுகாப்பு தரும் எல்லை
என்றால்' கிழக்கிலும் , மேற்கிலும்
தெற்கிலும் கடல்கள் பாதுகாப்பு ;
இப்படி இருந்தது நம் நாடு
ஆயின் , ஆண்டாண்டு காலமாய்
சிதறி இருந்தது பல சிறு 'நாடுகளாய்'
பல பல பேரரசரும், சிற்றரசும் ஆண்டுவந்தனர்
முடியாட்சி செலுத்தி' நம் தாய் நாட்டை ;
இவர்களுக்குள் ஒற்றுமை குன்றி இருந்தபோது
எப்படியோ நாட்டின் வட எல்லையில்
புகுந்து விட்டன ' ரக்தவெறி கொண்ட குள்ளநரி'
கூட்டங்கள், ஒற்றுமையில்லா சிற்றரசுகளை
தம் வலிமையால் தாக்கி , நாட்டை சூறையாடி
செல்வமெல்லாம் பலகால் சூறையாடி
சென்றவண்ணம் இருக்கையில், கடல் வழியாய்
வந்து சேர்ந்தனர் வாணிபம் நடத்த சில
வெள்ளைய கும்பல்கள் வாணிபர் இவர்
ஆட்சி செய்ய பெறுமோகம்கொண்டு
மெல்ல மெல்ல நம் நாட்டையே நம்மிடமிருந்து
பிடுங்கிக்கொண்டனர், நம்மை அடிமைகளாக்கி
'அப்பப்பா என்னென்று சொல்வது இக்கொடுமையை
அப்போதுதான் நம் நாட்டாரும் சற்றே விழித்துக் கொண்டனர்
அடிமைகள் மோகம் போய், சுதந்திர தாகம் எடுத்தது
ஆயிரம் ஆயிரம் தியாகிகள் தோன்றினார்
எங்கும் நாட்டில் சுதந்திர போராட்டம், எழுச்சி
'வெள்ளையனே,வெளியேறு' என்று கூக்குரல்
விண்ணை முற்ற, போராட்டம், ரக்த வெள்ளம்
முடிவில் 'கத்தி இன்றி, ரக்தமின்றி' நாட்டை
மீட்டுக்கொள்வோம் என்று அண்ணல் காந்தி
நடத்திய பெரும் போராட்டம், 'உப்பு சதியா க்ரிஹம்'
இப்படியே தொடர , நாட்டை விட்டு ஓடிவிட்டான்
வெள்ளையனும், ஒரு நாள் அவ்வினிய நாளில்
'சுதந்திர தாகமும் தணிய நம் தாய் நாடு
'சுதந்திர நாடானது.


சுதந்திர இந்நாட்டை ஆள்வதெப்படி
யார்தான் ஆள்வார் என்ற பிரச்சனை
இப்போது தலை தூக்கியது- வேண்டாம்
முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி
வேண்டும் வேண்டும் மக்களாட்சி என்று
நாட்டின் மூத்தோர் முடிவு செய்ய
'மக்களால், மக்களுக்காக மக்கள்
நடத்தும் ஜன ஆட்சி , அதுவே 'குடியரசு'
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டில் கொண்டுவரப்பட்டது
நம் நாட்டிற்க்கே தனிமை வாய்ந்த
அரசியல் சாசனம் சான்றோர்கள் குழு
ஒன்றால் இயற்றப்பெற்றது , அதன் பேரில்
ஐந்தாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும்
தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
நாட்டை ஆள தொடங்கினர் ................இன்றுவரை
இந்த 'குடியரசு' நீடிக்கின்றது , வல்லரசுகளும்
அஞ்சிடும் வலிமைப்பெற்று ஒரு மாபெரும்
குடியரசாய் பொழிகின்றது இன்று
நம் பாரத நாடு ''''''''''''''''''''''''''''

அதோ எங்கும் நம் நாட்டின் கொடி
இந்த குடியரசு தினத்தில் ஓங்கிவளர்ந்த
கம்பங்களில் எழிலாய் அசைகிறதே
'வந்தே மாதரம். வந்தே மாதரம்
என்று கூறி சிரம் குவித்து தலை வணங்கி
வாழ்த்துதுவோம் , நாம் இந்தியர் என்ற
உணர்வுடன் வாழ்ந்திடுவோம் நாட்டை காத்திடுவோம்
உண்மையாய் நாட்டிற்கு உழைப்புதரும் நல்லோரை
தெரிந்து தேர்ந்தெடுப்போம், நாட்டின் வளத்தை பெறுக்கிடுவோம்
'எல்லாரும், எல்லாம் பெற்றிடுவோம்,ஒன்றாய்க்கூடி
இன்புறுவோம், இனிய இந்நாட்டில் வாழ்ந்திடுவோம்

வாழிய நம் நாடு................'ஜெய் ஹிந்த்..................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jan-18, 2:05 am)
Tanglish : kudiyarasu
பார்வை : 98

மேலே