கடலைச் சேர்ந்த நதி

மலையின் முகட்டில் ஊற்றெனப் பிறந்தேன்
தலைநிமிர் பாறைகள் இடையே தவழ்ந்தேன்
கலைநயம் நறைந்த காட்டிடை வளர்ந்தேன்
வியைிலா தெதையும் விரும்பிச் சுவைத்தேன்!

நடைதனைப் பழகிநான் மெல்லென நடந்தேன்
ஓடையாய் ஓடிட என் உளமே விழைந்தேன்
தடைபல தாண்டித் தாவியோடிக் குதித்தேன்
மடையது மாறிட அழகுறச் சிரித்தேன்!

காடுமலை தாண்டவீறு கொண்டே யெழுந்தேன்
ஓடுநிலை மாறியதால்மே லிருந்து வீழ்ந்தேன்
பாடுகின்ற அருவி யெனும்பே ரடைந்தேன்
கோடிமக்கள் குளித்துக் களிக்க வீழ்ந்தேன்!

வீழ்ந்தவிடம் எதுவென்ற றியப் பார்த்தேன்
விரிந்து பட்டநன் நிலமென்றே யறிந்தேன்
வாழ்ந்திந்த நிலமெல்லாம் விளங்க நினைத்தேன்
வழிநடந்து வளமனைத் தும்தரவே விழைந்தேன்!

ஆர்ப்பரிக்கும் நிலையேதாண்டி ஆறாய்த் தவழ்ந்தேன்
அளவிலா மக்களவர் தாகம் தணித்தேன்
ஆரவாரம் அற்றேவழியை அமைதியாய்க் கடந்தேன்
அவரவர் தேவையெலாம் நிறைத்தே நடந்தேன்!

நஞ்சைவயல் புஞ்சையிலும் வழிநான் நடந்தேன்
நடந்துவந்த பாதையெலாம் செழிக்கச் செய்தேன்
தஞ்சைத் தரணியும் தாண்டிப் பாய்ந்தேன்-தெற்கே
தமிழ்நாஞ்சில் குமரியைினைத் தானும் பார்த்தேன்!

நான்நடந்த பாதையெலாம் செழிக்கச் செய்தேன்
வான்போலப் பொய்யாது நிலமெலாம் காத்தேன்
தேன்மொழிப் பெண்டிரைனைத் தேடப் பாய்ந்தேன்
தினந்தோறு மவரென்னைப் போற்ற மகிழ்ந்தேன்!

நான்கடந்த பாதையினைத் திரும்பிப் பார்த்தேன்
ஏன்வந்தேன் காதகாத வழியென வேநினைத்தேன்
மீனாட்சிசெய் கடலின் மகளாங்குநிற்கச் செந்தேன்
தமிழாலே அலைவீசும் கண்கள் பார்த்தேன்!

தானாட்சிசெய் திறனோடு சிதறாமல் நற்றேன்
மொழித் தமிழாலே வரவேற்க மகிழ்ந்தேன்
”நானாட்சிசெய் கடலைச்சேர் வாய்நீ எந்தேன்!”
எனத்தன் கைகள்நீட்ட எனைநான் மறந்தேன்!

பாங்குடன் விரிந்த பங்கயக்கைகள் அறிந்தேன்
பாசமும் காதலும் பால்சேர்நீ ரெனவே தெளிந்தேன்
தாங்கிட அழைக்கும் தளிர்க்கையின் தன்மையறிந்தேன்
தந்தேன் எனையெனத் தஞ்சம் அடைந்தேன்!!!
-----------------
ஆர்.கே.மேகன்

எழுதியவர் : ஆர்.கே.மேகன் (23-Jan-18, 9:57 pm)
சேர்த்தது : RKமேகன்
பார்வை : 115

மேலே