வாழ்வெனும் சதுரங்கம்

வாழ்வெனும் சதுரங்க
விளையாட்டில்
நானும் எந்தன் விதியும்
எதிர்ரெதிர் போட்டியிட....!

விதி தன் சூழ்ச்சிக்
கொண்டு காய் நகர்த்த
நானும் எந்தன் மதிக்
கொண்டு நகர்திடுகிறேன்...!

நான் வெட்டு வாங்கி வாங்கி
வீழ்ந்த போதிலும்
துவண்டுப் போனதும் இல்லை
தாழ்ந்து போனதுமிலை...!

எந்தன் காய்கள் விழ விழ
என் கையுயர்தியே
காய் நகர்த்திடுகிறேன்
மதி விதி வெல்லுமென்றே....!

எழுதியவர் : விஷ்ணு (24-Jan-18, 8:39 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 118

மேலே