முதியோர் காதல்

என் உயிரின் உயிர்துளியே
என் உலகம் நீயடி..!
இந்த உயிரே உனக்கென்று
வாழ்வேன் நானடி..!

வருசங்கள் கடக்கட்டுமே
வயசும் கூடட்டுமே
வாழ்க்கையில் நீயிருக்க
வாலிபம் தொலையாதே..!

முடிகளும் நரைக்கட்டுமே
முகமும் சுருங்கட்டுமே
முத்தத்தில் சுவையிருக்க
முதிர்ச்சி கிடையாதே..!

கண்கள் மங்கட்டுமே
கைகள் நடுங்கட்டுமே
காதல் துணையிருக்க
கவலைகள் கிடையாதே..!

மூச்சும் குறையட்டுமே
பேச்சும் திணறட்டுமே
உயிரோடு நாமிருக்க
உறவுகள் நீடிக்குமே..!

கடலும் அலையுமாக
கடைசிவரை இணைந்திருப்போம்..!
மலரும் இதழுமாக
மகிழ்ச்சியில் பூத்திருப்போம்..!
வாழும் நாட்களில்
வசந்தத்தில் குடியிருந்து
சாகும் போதிலும்
சமாதியில் சேர்ந்திருப்போம்..!

வாழும் நாட்களில்
வசந்தத்தில் குடியிருந்து
சாகும் போதிலும்
சமாதியில் சேர்ந்திருப்போம்..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (24-Jan-18, 5:44 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
Tanglish : muthiyor kaadhal
பார்வை : 130

மேலே