அப்பா

அப்பா
ஆயிரம் பட்டாம்சிபூச்சிகள் பறக்கும்
அப்பா என்ற ஒரு சொல்லை சொல்லும்போது.....அன்று
அடிமனதில் ஒரு வலி , ஏக்கம் பிறக்குது
அப்பா என்ற ஒருவர் இருந்தார் என்று நினைக்கையில்...இன்று
என் மகள் அழகு என்று சொல்லிய போது
பொய்யை தாண்டி அங்கு அவரது பாசம் தெரிந்தது
கண்ணால் பார்த்ததை எல்லாம் வாங்கி தந்தபோது
என் சந்தோசத்தை பெரிதென்னும் அவரது நேசம் தெரிந்தது
கணவர் பிள்ளைகள் என்று ஆன போதும்
குழந்தையாய் நடத்திய போது அவரது வாஞ்சை தெரிந்தது
எல்லாம் இருந்த போதும் , எல்லாம் கிடைத்த போதும்
ஒன்றுமே இல்லாதது போல் தோன்றுகிறது அவர் இல்லாததால்......
அறியா வயசில் அனுபவித்தேன் உங்கள் அன்பை புரியாமல்
புரிந்த பின் தேடுகிறேன் உங்களை சந்தோசப்படுத்தி பார்த்திடவே
என்று காண்பேன் என் தாயுமானவரை.........

எழுதியவர் : ஸ்ரீமதி (24-Jan-18, 7:08 pm)
சேர்த்தது : srimathy
Tanglish : appa
பார்வை : 106

மேலே