அக்கா

மூன்றெழுத்தில் என் மூவுலகை அடக்கியவள்
என் முகம் கண்டே மனம் காணும் மாயை இவள்

அன்னை மடி வாசம் அதிகம் கண்டதில்லை
என் அக்கா மடி பாசம் அதற்கு குறைவு இல்லை

தந்தை துணை கொண்ட பயணம் நினைவில் இல்லை
நீ தந்த துணையின் நினைவின்றி ஒரு பயணம் இல்லை

பண்ணதென்ன புண்ணியமோ தெரியவில்லை
பர பிரம்மனுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை

எனக்கின்னுமொரு ஜென்மம் உண்டா தெரியவில்லை..........
எனக்கின்னுமொரு ஜென்மம் உண்டா தெரியவில்லை..........

உண்டு என்றால்........
இதே சொந்தம் போதும்........

இதற்கு ஈடு இணை .........ஏதும் இல்லை .............

எழுதியவர் : Anju (25-Jan-18, 1:29 pm)
சேர்த்தது : அஞ்சலி
Tanglish : akkaa
பார்வை : 142

மேலே