மனித நேயம் வளர

மனிதம் என்ற பண்பு
மனித நேயத்தில்தான்
அது மாய வித்தை அல்ல
அன்பின் அடித்தளம்

இன்று மனிதப் பண்பு மாண்டு போகிறது
மனிதனின் மரியாதையை
கொச்சைப் படுத்தி
அவமானப் படுத்தி அகமகிழ்வது
தான்தோன்றித்தனமாகிறது

இன்றய சமுதாயத்தில் வளர்ந்து வரும்
கல்வி அறிவு முன்னேற்றம் நாகரீகம்
அநியாயமாய் நசுக்கப் படுகிறதே
அழிந்து போகிறதே ஏன்/ எதற்கு /

ஒரு அறிஞனின் ஞானம்
நல்ல குறிக்கோள், இலக்கிய மாண்பு
ஒவ்வொன்றும் விலைமதிப்பற்றவை
போற்றபட வேண்டும்

வள்ளல் அவன் பெயராகும்
சொல்லை வாரியிரைப்பதால் என்றாகும்
தூய தமிழ் வரிகளில்
வாழ்த்தவும் வணங்கவும் உணர்ந்தவன்

வளர்க அவன் ஞானம் ,வாழ்க அவன் புகழ்
எழுத்தாளனின் ஏக்கம்

எழுதியவர் : பாத்திமாமலர் (25-Jan-18, 1:13 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 231

மேலே