பணம்

பணம் பத்தும் செய்யும்
என்பது ஏட்டுமொழி...
இன்றோ உறுதிமொழி...
உதவ இயலா மகள்
மேடம் ஆனாள்...
பெத்தமனம் பித்து
பிள்ளைமனம் கல்லு அன்று...
பிள்ளை மனம் பித்து
பெத்த மனம் கல்லு இன்று...
தாயும் தந்தையும்
என்றும் ஒன்றாகா...
உண்மை அறிந்தேன்
அனுபவித்து...
தான் செத்தாலும்
பிள்ளை வாழனும் - தாய்
நானே நல்லா வாழல
நீ எப்படி போனா எனக்கென்ன - (ஒரு சில) தந்தை
தவியாய் தவித்தாள்
பேதை தந்தையின் சுடுசொல்லால்
பணம் ஒரு உயிர்கொல்லி
ஏழைகளுக்கு
இறப்பது பெரிதல்ல
வாழ்ந்து காட்டுவதே பெரிது...