சுதந்திரம்

ஆயுதம் ஏதும் ஏந்தாமல்
அற வழியேந்தி
சென்ற மறவர் கூட்டம்...!

அடிவாங்கி வலித்த போதும்
அம்மா என்றுரைக்காது
உரமேறிய உரத்தக் குரலில்
வெள்ளையனே வெளியேறு என்றுரைக்க......!

அஞ்சா நெஞ்சம் கொண்டே
நிமிர்ந்த செருக்கினில்
ஆங்கிலேய விலங்குகள் இட்ட
விளங்கை உடைத்தெறிய...!

அவர்கள் தலையை தரைமீது
வீழ்த்தி உருட்டிய போதும்
பரங்கியர்க்கு தலைவணங்காத
கூட்டம்.......!

இன்னும் பலர் தத்தம்
இன்னுயிர் ஈந்து ஏற்றிய
விளக்கொளில் அந்த மருள்
எனும் இருள் விலக்கி

#வாங்கிய #சுதந்திரம்....!

எழுதியவர் : விஷ்ணு (26-Jan-18, 6:02 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 68

மேலே