விரிசல்கள் வேண்டாம்

நினைவுகளை மீட்கின்றேன்
ஒற்றைக் குடிசையில்
ஒற்றை அறையில் படுத்துறங்கி
ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்து
ஒருவருக்கு ஒன்றானால் பதறி பயந்து
ஒற்றுமையாய் வாழ்ந்த நாட்களை

மாடி வீடுகளும்
சாெகுசு வாழ்க்கையும்
காெட்டல் சா்ப்பாடும்
தாெலைபேசி உரையாடலுமாய்
தாெலைந்து பாேகிறது
பந்தங்களும் பாசங்களும்

விஞ்ஞானங்களும் நாகரிகமும்
வளர்ச்சி என்ற பாேர்வையில்
விரிசல்களை விரிக்கிறது
கலாச்சாரங்கள் கண்களை மறைக்கிறது
கலியுகம் பிறந்து பழமைகள் அழிகிறது

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
வா நண்பா!
புதியதிலும் பழையதை தேடுவாேம்
பந்தம், பாசம், சாெந்தம், உறவு என்ற
சாெர்க்கத்தை உருவாக்குவாேம்
உறவுகளை இணைப்பாேம்
பகைமைகளை மறப்பாேம்
ஒன்றாய் வாழ்வாேம்

எழுதியவர் : அபி றாெஸ்னி (26-Jan-18, 7:40 am)
Tanglish : virisalgal ventaam
பார்வை : 112

மேலே