முக நூல் தோழிக்கு
இதயமே மெய் சிலிர்க்கும்
உன் பாசம் கண்டு,
இணையமே மெல்ல சிரிக்கும்
உன் வருகை கண்டு
முக நூலும் காத்திருக்கிறது
உன் இடுகைக்காததான்
முகம் நூறும் வாடி கிடக்கிறது
உன் வருகைக்காகத்தான்
தினம் ஒரு இடுகை நீ இட்டால்
இணையத்துக்கே இதயம் துடிக்கும்
இயல்பு மீறிய உன் குறும்பு
இதயம் இல்லா ஆடவனுக்கு பிடிக்கும்
கண்ணனுக்கு தெரியாத காற்றை போலவே
உன் அன்பும் தொலைவில் இருந்தாலும்
இணையத்தை தொட்டு தொட்டு சுகம் தருகின்றன
உன் நட்பிற்காய் பாக்கியம் செய்தேன் பல நூறு
நீ பதியப்படாத ஒரு வாக்கிய புற நானூறு
உன் இடுகை நிற்காத செல்லும் பாலாறு
உன் வருகை உலகிற்கே சொல்லும் புது வரலாறு ........
உன் அன்பை கண்டு
இறைவனும் ஏங்கி போவான் - நிவி
உன் போல நட்பு கிடைக்கவில்லையே என்று ...!!!
முக நூலுக்கே தேவை தா உன் நட்பு
முழு உலகுக்கே தேவதை தா என் நட்பு