குடியரசும் இடிமுரசும்

குடிபோதைக்கு அடிமையாக்கி விடியல்வரை மடியில்கிடத்தி
துடித்துச்சாகும் பிடிமண்ணை இடிமுழங்க வெடிக்கவைத்து...

அடிமாடு பிடிநாடு கடிவாளச்சிறை கொடியேந்தி
வாடியபயிரை படிநிறைக்க நாடிச்செல்லா குடியரசு...

சிரம்சுமக்கும் தலைநகரம் உரமற்று போனபின்னே
மரத்தடியில் விலைகாணும் மரத்தமிழன் அறவாழ்க்கை...

ஏற்றம்காண தோற்றப்பிழை ஆட்சிபுரிவதே அரசவினை
தூற்றும்நாவு ஆற்றல்தனை காட்சியறிவதே காணாநிலை...

எழுத்தாணி பழுதல்ல விழுதென எழுந்துநிற்கும்
கழுவேற்றம் கழுத்தறுக்கலாம் கழுதையறியுமா விழுந்தவரிகளை...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (26-Jan-18, 9:41 am)
பார்வை : 61

மேலே