கவிதை பிறந்தது

உன்னை
காண்பதற்கு முன்
என் எழுதுகோல்
அமைதியாய் தான்
இருந்தது

***

பூவிலிருந்து
பிரித்தெடுத்தேன்
கவிதை பிறந்தது

***

அந்த பெரியவர்
முதலில்
பூவுக்கு
பாடை கட்டுகிறார்

***

உன் பிரிவால்
உடைவது
சொற்கள் மட்டுமல்ல
என் இதயமும் தான்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (26-Jan-18, 10:38 am)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 493

மேலே