கண்ணீர் பூக்கள்

உன்னை பார்க்கும்
நொடியில் தொட்டு
பேசுகிறேன்
செய்வதறியாது
காணொளியின்
தொடுதிரையில்

நீ அங்கே
நான் இங்கே
என்னவோ...!?

நினைவுக்காம்பின்
கணம் தாங்காமல்
கீழே விழுந்து சிதறுகிறது
கண்ணீர் பூக்கள்

_J.K.பாலாஜி_

எழுதியவர் : J.K.பாலாஜி (26-Jan-18, 10:37 am)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : kanneer pookal
பார்வை : 368

மேலே