குட்டி தேவதை வண்ணாத்தி..
..##குட்டிதேவதை_வண்ணாத்தி...
கல்லும் கரைந்து போகும்
மண்ணும் மலையாய் உருவெடுக்கும்
நீலவானமும் மழையை கொட்டும்
வரண்ட நிலத்திலும் பூஷ்பங்கள் செழிக்கும் ஆமாம் அவளின் முகம் பார்த்தால்
சுடும் சூரியனும் சுயமிழந்து நிற்கும்
ஆறெங்கும் கவிதைகள் ஓடிக்கொண்டிருக்கும் கரையெங்கும்
கவிஞர்கள் காத்திருப்பார்கள் கூலாங்கற்களை வீசி உனது நினைவலைகளை வட்ட வட்டமாய் வரைந்தும் குட்டி தேவதை எனும்
கதையெழுதி கொண்டிருப்பார்கள்
நீரருந்து வரும் காக்கையும் இங்கு
தூதுசொல்லும் ஒற்றன் தான்
நாய் நரி கழுதை யானை ஆடு மாடு
யாவுமே குட்டிதேவதை காவலர்கள் தான்
அங்கு வீசும் தென்றல் காற்று குட்டி தேவதையின் உலாவரும் குறிப்பு தான்
பொழுதுகள் சாய்ந்தாலும் இரவு நடந்தாலும்
சலசல சத்தத்திலும் குட்டிதேவதையின்
வர்ணனை தான் சந்திரன் வந்து பார்த்துவிட்டு ஓரமாய் ஒரு இடம் கேட்டான்
வந்தவன் குட்டி தேவதையை யாரென்றான்
இரவு முழுதும் யோசித்தான் வந்தது காலை
வந்தாள் அந்த குட்டிதேவதை ஒரு கழுதை மூட்டைதுணியோடும்
முழங்கால் தெரிய புடவை அகன்ற மார்பு
செவ்வெளநி இடை அழகிய பூமுகம்
அவள் தான் எங்க ஊர் ஆத்துக்கார வண்ணாத்தி...
..##சேகுவேரா சுகன்......