எனது நாட்கள்
செந்நெல் கதிர்கள்,
காலைக் கதிர் கண்டு
தலை வணங்கும்!!!
சேவற் கடிகாரம்
ஒலித்த நேரம்!
கருப்பட்டிக்" காபி"
தந்த தித்திப்போடு
கருவேலங் குச்சி அன்று
சீக்கிரம் தேய்ந்தது!
யாருக்கும் அடங்காமல்,
ஒடித் திளைக்கும் அந்த
அருவியில் நீண்ட பயணம்!!!
தினைச் சாதம் கிடைக்கும்
திண்ணை தோறும்!
பகிர்தல் என்றும்
மகிழ்ச்சியன்றோ???
பகல் முழுதும்
புழுதிக் காட்டில் இருக்க
நேரம் காலம் தெரியாது!!!
மதியம் செல்வோம்
வாத்தியார் காண,
கண்ணதாசனின்
மனம் மயக்கும் வரிகள்
முனுமுனுக்கச் செய்திடும்!!
தெருவெல்லாம் மக்களின்
மண் விளக்கு ஒளிரும் நேரத்தில்
வீடு திரும்புவேன்!!!!
ஓடுகளின் ஒட்டைகளுக்கு
இடையே எட்டி பார்க்கும்
மதி கண்டு மதி மயக்கம்
கொண்டு கண்கள்
மூடலானேன்!!!!
இடி போல அவளின் குரல்
கேட்டது!!
எழுந்தேன்
கனவிலும் கூட நிம்மதியில்லையே என்று!!!!!