வாழ்க்கை , என்ன சுகம் கண்டேன்
உடலைப்பற்றி எழுதினால்
கவிதைப் புனைந்தால்
அதை முகநூலில் ஏற்றி
விளம்பரம் தந்தால்-அதை
ரசித்து படித்து பரபரப்பூட்டும்
விமரிசனங்கள் தருவார்
ஆயின் ஆன்மாவைப் பற்றியோ
வேதாந்த தத்துவங்களைப் பற்றி
உள்ளதை உள்ளவாறு சொன்னால்
கட்டுரை எழுதினால் ,கவிதைகள்
புனைந்தாலோ அந்தோ ஒரு
ஆன்மா கூட இதற்குற்ற வரவேற்பு
தராமல் இருப்பது , உண்மைக்கும்
நமக்குமுள்ள தொடர்பின் தராதரம்
காட்டுகிறதென்பேன்-இல்லாததை
இருப்பதாய் நம்பியே வாழ்வை கழிக்கும்
நாம் நிஜத்தை விட்டு பிம்பத்தில் அல்லவா
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் -வாழ்க்கை
சமுத்திரத்தில் எதிர்நீச்சல் போடும் நாம்
மூழகும் முன்னேயாவது காக்க வரும்
கட்டுமரத்தை பார்த்து ஏறிக்கொள்வோமா
கரை சேர்த்திடும் நம்மை அது , அதுதான்
உண்மை , அதற்கு மறுபெயர் ஈசன் ,இறைவன்
கடவுள் என்பனவாம்.