காமப் பேய்களே
காமப் பேய்யே கற்பு
என்பது காகிதம்
அல்லவே கசக்கி எய்திட....!
நின்னுடல் பசித் தீர்க்க
அவள் மெய்
பூசித்து தின்பது சரியா....!
அவள் உடல் வலுவற்றவள்
என்பதால் வளைந்தக்
கொடுக்காவிடில் கணப் பொழுது...?
நின் தீரா தாகம் தனிக்க
அவள் உயிர்
உறிஞ்சி குடிப்பது நியாயமா.....!
உனைப் பெற்றவளும் பெண்
தானே கணநேரச்
சுகத்திற்கு ஆசைப்பட்டு
அதனை மறந்தாயோ.....!