ஏமாறுவதும் சுகம்
எத்தனை முறை ஏமாந்தாலும்;
ஏமாறுவதும் சுகமென
சொக்கி நிற்பேன்
என் பிள்ளையிடமே!!!
நிலாவினையும் நட்சத்திரங்களையும்
உன் பிஞ்சுக்கைகளுக்கு
விளையாட தருவேன்
என ஏமாற்றுவதும்!!!!
தூங்கிட்டாயா??? என் கேட்க
தூங்கிவிட்டேன் என
தூங்குவதாய் ஏமாற்றும்
மழலையிடம் ஏமாறுவது
சுகம் சொர்க்கம்!!!!