எல்லாம் தனியனாய்!

ஒரு நாள் -
ஒரு காகம்,
ஒரு கூடு கட்டிற்று;
தன்னந் தனியனாய்!

மறு நாள் -
ஒரு குருவி,
சிறு கூடு கட்டிற்று;
தன்னந் தனியனாய்!

ஒரு வருடமாய் -
நானும் தான்,
அலைகிறேன்; அலைகிறேன்,
மேசனின் பின்னால்;
தச்சனின் பின்னால்!

வீடு மட்டும்
முடிந்த பாடில்லை!

எழுதியவர் : கீர்தி (4-Aug-11, 10:51 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 354

மேலே