இயற்கை எழில்---எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர் விருத்தம் :


செங்கதிரோன் ஒளிவீழ்ந்து தெண்ணீர்ப் பொய்கை
=====செம்முகிற்போல் கவினேற்குஞ் சிவந்த சையும்
பங்கயத்தேன் தனைவண்டு பருகுந் தோற்றம்
=====பருவமங்கை நீராடிக் களித்தல் போன்றும்
செங்கயல்வெண் கொக்கின்வாய்ச் செலுதோ?... துள்ளி
=====தியங்கிநெய்தல் மேல்விழுதோ?... மயங்க வைக்கும்
செங்கனிகள் அணிற்கடித்துச் சிதறுங் காட்சி
=====தீரத்தின் மரம்பூவு திர்த்தல் ஒத்தே...

எழுதியவர் : இதயம் விஜய் (30-Jan-18, 10:02 pm)
பார்வை : 735

மேலே