உணவை வீணாக்காதீர்கள் ஒரு விவசாயியின் குமுறல்

மூனு நாளு சேடைக்கட்டி
பதமா நஞ்சை உழுது
முப்பது நாள் நாத்துல காத்து
தொன்னூறு நாள் வயலுல காத்து
கொடஞ்சு எடுக்கும் பெருச்சாலிகிட்ட காத்து
கொத்தித் தின்னும் குருவிக்கிட்ட காத்து
அறுக்கறப்ப விழுகிறது காத்து
களத்துல அடிக்கறப்ப சிதறது காத்து
மெஷின்ல அரைக்கறப்ப குருணையாகாம காத்து
மிஞ்சினத தான் உம் தட்டுல சேத்தோம்
பதனமா செலவளிங்க
என் கண்(நெல்)மணியை!!!

எழுதியவர் : Narmatha (29-Jan-18, 10:55 am)
பார்வை : 213

மேலே