மெல்லிய காதல்
தானா பாடும் குயில் பாட்டில் ஏனோ எனக்கு சுகமில்லை!
தேனா பாயும் என் காதில் உன் பேர் கேட்கையிலே!
வான் நோக்கிப் பாயும் என் நினைவு மழையாய் திரும்புமே! நாணத்தில்
நிலம் நோக்கிப் பாயும் உன் கண்ணால் பூஞ்சோலை
பூத்ததே!
இது மென் காதல்!🔆 இனி,
வான் நோக்கிப் பாய்ந்த என் நினைவு,மின்னலாய்
திரும்பியதே!
நிலம் நோக்கிப் பாய்ந்த உன் கண்ணால் பூகம்பம்
தோன்றியதே!
இது வலிமையான காதல்!