நல்லது செய்தால்

நாம் எதைச்செய்கிறோமோ, அதுவே நமக்கு நடக்கும்., கிடைக்கும் என்பதைப்பற்றி விளக்கமாக பார்க்க இருக்கிறோம். உதாரணத்துக்கு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. நாம் எதை செய்கிறோமோ, அதுவே நமக்கு திரும்ப செய்யப்படும். எதை விதைக்கிறோமோ, அதையே அறுப்போம். நல்லது செய்தால், நல்லது நடக்கும். கெட்டது செய்தால், கெட்டது நடக்கும். இதற்கு உதாரணமாக நான் ஒரு சம்பவத்தை உங்களுக்கு விளக்க விரும்புகிறேன்…

ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர், தனது கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார்.வாகனங்கள் சாலையில் செல்லும்போது அந்த பெண்மணி வாகனங்களை கை காட்டி நிறுத்தப்பார்த்தார்., ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அப்போது அங்கிருந்த அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை? என்று அந்த பெண்மணியிடம் கேட்டார். “கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது” என்று அந்த பெண்மணி கூறினார். உடனே அவர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, “என் பெயர் ராமு. நீங்கள் காரில் உட்காருங்கள். நான் டயரை மாற்றி உங்களுக்கு கொடுக்கிறேன்” என்று டயரை கழற்ற ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாற்றிக்கொடுத்தார்.

உடனே, அந்த பெண்மணி அவருக்கு நன்றி கூறினார். “நான் உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்?”என்று கேட்டார். அதற்கு அவர், “நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன்., அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதுமானது., நீங்கள் பணம் எதுவும் தர வேண்டாம்” என்றார்.

மேலும்,” நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவியை உங்களுக்கு செய்தேன் அவ்வளவே.நீங்கள் பண உதவி யாருக்காவது செய்ய வேண்டும் என்று விரும்பினால், ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது, என்னை நினைத்து பாருங்கள்., அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.

“ஏனென்றால், உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும். நான் உங்களுக்கு உதவி செய்தேன்., நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு ராமு நடக்க ஆரம்பித்தார்.
அந்த பெண்மணி, ராமுவை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு, காரை எடுத்து கொண்டு சென்றார். வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே, அருகில் உள்ள ஒரு டீக்கடை அருகே, காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

அந்த டீக்கடை பார்ப்பதற்கு ரொம்ப பரிதாபமாக இருந்தது. உள்ளே இருந்து ஒரு பெண் வந்து “என்ன வேண்டும், அம்மா?” என்று கேட்டார். வயதான பெண்மணி, டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார். அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.

“குடிக்க டீ கொண்டு வாம்மா” என்றார். ராமு சொன்னது அவருக்கு நினைவு வந்தது. அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5,000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விட்டார். டீக் கடையில் வேலை செய்த பெண், டீ டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்., ஆனால், அதற்குள் கார் கிளம்பிச் சென்று விட்டது.
கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்கு, அந்த பெண்மணி சென்றார். “பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம்? என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும்” என்று அருகில் சென்றார். ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார், ராமு. இந்த சம்பவத்தில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கு நடக்கும். இந்த ராமு தன் கஷ்ட நிலையிலும், அந்த பெண்ணிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல், உதவி செய்தார். ஆனால் கடவுள் அவரது கஷ்டத்துக்கு அவரது மனைவி மூலமாக, அவருக்கு உதவி செய்தார். இதில் இருந்து நான் கூற விரும்புவது, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல, நாம் என்ன செய்கிறோமோ அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும். எனவே நல்லதையே விதைப்போம்., நல்லதையே செய்வோம்., நல்லதே நடக்கும் வாலிபனே…!!.

எழுதியவர் : (31-Jan-18, 12:01 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : nallathu seithaal
பார்வை : 421

சிறந்த கட்டுரைகள்

மேலே