சுதந்திரம்

வானத்தில் பறந்திடும்
உயிர்களாம் பறவைகள்,

அவை பறப்பதை
காணும் போது மட்டுமே
நினைவுக்கு வருகிறது,

நாம் கூட
சுதந்திர நாட்டில்
இருக்கிறோம் என்று,

காந்தி மகாத்மா
பெற்று தந்த ஒன்று,

போற்றி பாதுகாக்க
ஆளின்றி,
சிறைபட்டு கிடக்கின்றது
பணமுள்ளவன் கையில்......

எழுதியவர் : Meenakshikannan (4-Aug-11, 11:51 am)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : suthanthiram
பார்வை : 401

மேலே