கோவம்
நீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும்
உன்னைவிட பேரழகு
ஒன்றும் இல்லை
இந்த உலகத்தில் எனக்கு...
நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி
அணைக்க தூண்டும் அழகு இல்லை...
ஆனாலும் பழகியவுடன் அள்ளிக் கொஞ்ச
தோன்றும் என் செல்லகுட்டி நீ...
எதோ காரணங்களுக்காய் சண்டையிட்டு
என்னிடம் பேசாமல் இருக்கிறாய்.
நீயாய் பேசுவாய் என நானும்,
நானாய் பேசுவேன் என நீயும்,
ஈகோ நண்பனை தோளில்
சுமந்தபடி காத்திருக்கிறோம்.
கோபம் கொள்ளும் நேரங்களில்
ஏதேதோ காரணங்கள் கொண்டு
உன்னிடம் பேச வருவேன்.
மிக இயல்பாய் என்னை
மரியாதையாய் அழைப்பாய்.
அது எதோ அந்நியப்படுதல் போலிருந்தாலும்,
அதிலும் ஒரு அழகுணர்ச்சி இருக்கும்.
உன்னை தவிர்க்க வேண்டும் என நினைத்து
நான் செய்யும் அத்தனை காரியங்களிலும்
நீயே தெரிவாய்.
நம் கோபங்களின் முடிவு எப்போதும்
முத்தங்களை நோக்கியதாகவே இருக்கிறது.
அதனால்தான் அடிக்கடி உன்னுடன்
கோபம் கொள்ளவேண்டும் போல் இருக்கிறது.
உன் கோபங்களோடுதான்
எனக்கு திருமணம் என்றவுடன்,
அந்த கோபத்தை தூக்கி எறிந்துவிட்டு,
என்னை தவிர நீ வேறு யாரையும் திருமணம்
செய்து கொள்ள கூடாது என்று என்னை
இறுக்கி அணைத்து கொள்கிறாய்.
Chooooo.... Chweeeeet....
ஆனாலும் உன்னைவிட உன்
கோபங்களைதான் எனக்கு பிடித்திருக்கிறது,
காரணம் அவைதானே உன் முத்த சாலைக்கு
என்னை வழி நடத்தி செல்கின்றன.