மஹத்தியும் நானும்

இறைவன்
பூமி வந்தால்
உனைப்பார்த்து
இது என் படைப்பா
என்று வியந்துப்போய்
அவன் பூமியிலே
தங்கிவிடுவான்...

உனை தோளில்
சுமந்து நடக்கும்போது
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தையாகவே
உணர்கி்றேன் நான்...

உன் மலர்போன்ற
சிரிப்பும்
சுட்டி சேட்டைகளும்
என் நெஞ்சில்
ஊஞ்சல்கட்டி ஆடுகிறது
அது என் சோகத்தையும்
சுகமாக மாற்றுகிறது...

உன் கிளிப்பேச்சில்
பம்பரம் போல்
மயங்கி மயங்கி
மதியிருந்தும்
பித்தனாகிறேன்...

உன் பிஞ்சு கரங்களால்
சுவற்றில் நீ கிறுக்கிய
கோடுகளையெல்லாம்
புதுகவிதையாகவே
பாதுகாக்கிறேன்..

உன் மழலை மொழியில்
மாமா என்றழைக்கும்
நொடிகளெல்லாம்
மீண்டும் புதிதாய் பிறந்த
குழந்தைப்போல்
என் இதயம்
சிறகடித்து பறக்கிறது
இன்ப வானிலே..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (1-Feb-18, 9:52 am)
பார்வை : 125

மேலே