இயற்கையின் காதலி
அதிகாலை விடியலும் நீ துயில் எழும் அழகை காண தானோ!
தென்றல் வீசுவதும் நீ உன் கலைந்த கூந்தலை சரி செய்யும் அழகை காண தானோ!
மழைத்துளிகள் போட்டி போட்டு பூமி அடைவதும் உன் கண்ணம் தீண்டும் ஆசையில் தானோ!
கடலலைகள் நாள் முழுவதும் கரைகாண வருவதும் உன் பாதம் தொடும் நப்பாசையில் தானோ!
சிறுபூக்கள் மணம் வீசுவதும் உன் நறுமணம் மீது கொண்ட பொறாமையில் தானோ!
விண்மீன்கள் தோன்றுவதும் நீ துயில் கொள்ளும் அழகை ரசிக்க தானோ!