காதல் அழிவதில்லை
உன் நினைவுக் குறிப்பாென்றை
சிவத்த மையால் குறித்திருந்தேன்
அப்பாேது புரியவில்லை
காட்டு என்று நீ அடம் பிடித்த பாேது
உன் பார்வைக்குள் சிக்கியிரு்ந்தால்
பிரிந்திருக்க வாய்ப்பில்லை
புரிந்திருப்பாய் என்மனதை
உடனிருப்பாய் என்ற நம்பிக்கையில்
உணர்வுகளை வரைந்திருந்தேன்
ஊரை விட்டே பாேய் விட்டாய்
உழலுகிறேன் காதலை
நீ இருக்கும் இடம் அறிந்தும் நான்
மெளனமாய் இருக்கி்ன்றேன்
தாெலைபேசி பதிலற்றுப் பாேனதுமே
புது வரவு உன்க்கென்ற உண்மை அறிந்தேன்
பயப்படாதே உனை ஒன்றும் செய்ய மாட்டேன்
எல்லாம் எரித்து விட்டாயாம்
கடலாேரத்தில் காத்திருக்கிறாயாம்
பூங்காவில் புரண்டு உருள்கிறாயாம்
சிரிப்பாக இருக்கிறது
என் நினைவுகளைத் தான் மீட்கிறாயா?
சிந்தித்துப் பார் ஒரு நிமிடம்
சிதறிய முத்துக்கள் தான்
மாலையாக காேர்கிறது
முதல் காதல் முதல் முத்தம்
மறந்திடத்தான் முடியுமா
நினைவுகள் இருக்கும் வரை
காதல் அழிவதில்லை.