நம்பிக்கை வையாதே!


அந்தக் காலத்தில் என் தந்தை
படிச்சுப் படிச்சுச் சொன்னார்கள்:

"பாழாய்ப் போன உலகில்
எதிலும் நம்பிக்கை வையாதே" என்று!

இந்தக் காலத்தில் என் குழந்தைகளைப்
பிடிச்சுப் பிடிச்சுச் சொல்ல வேண்டியிருக்கு:

"எதையும் நம்பி கைவையாதே,
வெடி குண்டாய் இருக்கு" மென்று!

எழுதியவர் : கீர்தி (4-Aug-11, 12:29 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 406

மேலே