தோல்வி
கனவுகளை கலைத்து விட்டேன்
பந்தயதில் தோற்று விட்டேன்
என்,
வலியை நானும் கூறுகிறேன்
கேட்பதற்கு ஆளும் இல்லை
தோல்வி தந்த வலியினிலே
சுருண்டு நானும் வீழ்ந்துவிட்டேன்
மிக அழுத்தமாக கத்தினாலும்
திரும்பி பார்க்க ஆளும் இல்லை
தடுக்கி விழும் போதேல்லாம்
என்,
உடம்பில் வடியும் குருதியடா-இருந்தும்
திரும்பி எழுந்து போராடும்
சாதாரண மனிதனடா