அருள்

முடியாத சிகெரட் கேட்கும் இளைஞர்கள்,தீராத குளிர் பானம் கேட்கும் யுவதிகள்,
விடியாத இரவு தேடும் புது மணத் தம்பதிகள்,சீரியல் பார்க்காது சீரியஸ் ஆகும் பெண்மணிகள்,சரியான நேரத்திற்கு பேருந்து வரக்
காத்திருக்கும் பயணிகள்,
வேலைக்குப் போகும்போது
போக்குவரத்தில்லா சாலை
கேட்கும் அலுவலர்கள்,
கல்லூரி மாணவர் போல் இரண்டு புத்தகம் மட்டுமே
எடுத்துச் செல்ல ஆசைப்படும்
பள்ளி குழந்தைகள்,பாக்கெட்
மனி,ஜாக்கெட் மனி நிறைய எதிர்பார்க்கும் மாணவ மாணவிகள்,மூவர் செல்லும்
போது வண்டியை தாவிப் பிடித்து காசு கேட்காத போலீஸ்
கேட்கும் இளைஞர்கள், முட்டையும் தேங்காயும் உள்ளே அழுகியது ,வெளியே
பார்த்து கண்டுபிடிக்க ஆசைப் படும் இல்லத்தரசிகள்,மெகா
மாலில் போட்ட விலை கொடுத்து,கீரைக் காரியிடம்
ஒத்தை ரூபாய் பேரம் பேசும்
சுகவாசிகள் இல்லா உலகோர் இவர்களுக்கெல்லாம் உன்
அருளை வாரி வழங்கிடு இறைவா!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (3-Feb-18, 5:57 am)
Tanglish : arul
பார்வை : 70

மேலே