உறங்கா அலைகள்

கடலில் அலைகள் அடிப்பதற்கே
காலம் எதுவும் பார்ப்பதில்லை,
உடலில் நல்ல தெம்பிருந்தும்
உறங்கிக் கிடக்கும் மானிடனே,
அடிக்கும் ஓசைக் கடிகாரமும்
ஆளை வைத்தே எழுப்பிடினும்,
உடையா துந்தன் சோம்பலென
உரைத்துச் செல்லும் அலைகடலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Feb-18, 7:38 am)
Tanglish : urankaa alaigal
பார்வை : 106

மேலே